தமிழ்நாடு
பாஜக கூட்டணியில் தினகரன் – சசிகலா? நாடாளுமன்ற தேர்தலுக்கு பக்கா பிளான்

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது குறித்த ஆலோசனையை பாஜக தற்போது தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டது போல் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அப்படி ஒரு நிலை நேர்ந்தால் பாஜக தனியாக ஒரு பெரிய கூட்டணியை அமைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் முதலில் அழைக்கப்படுபவர் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே திமுகவை விமர்சனம் செய்யும் அளவுக்கு பாஜகவை டிடிவி தினகரன் விமர்சனம் செய்வதில்லை என்பதால் இந்த கூட்டணிக்கு அவர் சம்பாதித்து விடுவார் என்று கூறப்படுகிறது.
டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இணைந்தால் அதிமுக மற்றும் திமுக அதிருப்தி ஓட்டுகள் கிடைக்கும் என்று பாஜக பக்காவாக பிளான் போடுகிறது. அதுமட்டுமின்றி தேமுதிக, பாமக உள்பட ஒருசில கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அண்ணாமலை தலைமையில் பாஜக தற்போது எழுச்சியுடன் இருப்பதை அடுத்து குறைந்தது 5 எம்பி சீட்டுகளில் ஆவது வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை பாஜக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.