தமிழ்நாடு
ஓபிஎஸ்-இன் திருச்சி மாநாட்டில் சசிகலா, தினகரன்!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில் மக்களை சந்திக்க உள்ளதாக ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. இதனையடுத்து வரும் 24-ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த உள்ளதாக ஓபிஎஸ் அணியினர் அறிவித்திருந்தனர். அதில் கலந்துகொள்ள சசிகலா மற்றும் தினகரனுக்கு அழைப்பு விடுக்க உள்ளனர்.

#image_title
இந்நிலையில் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாள் விழா, கட்சி பொன்விழா உள்ளிட்ட மூன்றையும் சேர்த்து திருச்சியில் வரும் 24-ஆம் தேதி மிகப்பிரமாண்ட மாநாடாக நடத்த உள்ளோம். இந்த விழாவிற்கு கட்சியில் இருந்து முன்பு நீக்கப்பட்ட அன்வர் ராஜா, கே.சி.பழனிச்சாமி போன்ற மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
அவர்கள் கட்சியில்தான் இருக்கிறார்கள், அவர்களும் கண்டிப்பாக இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். மேலும் சசிகலா, டிடிவி தினகரன் போன்றவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுப்போம். இதுகுறித்தான அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளிவரும். விழாவில் அனைவரும் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார் ஓபிஎஸ்.