தமிழ்நாடு
டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்: ஓபிஎஸ் அதிரடி!

அதிமுகவில் இருந்து முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என அதிரடியாக தெரிவித்துள்ளார். இது அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#image_title
அதிமுக தற்போது கிட்டத்தட்ட முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அவருக்கு போட்டியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சட்டப்போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும், வரும் காலங்களில் அதிமுக அமமுக ஒருங்கிணைந்து செயல்பட போகிறது ஆகவே அமமுக வினருடன் இணைந்து போராட்டம் நடத்தி உள்ளதாக ஓபிஎஸ் அணி ஆதரவு மாவட்ட செயலாளர் சையதுகான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், உங்கள் ஆதரவாளர் சையது கான், அமமுக உடன் ஓபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும் என சொல்லி இருக்கிறார். உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். விரைவில் உறுதியாக சசிகலாவை சந்திப்பேன் என்றார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.