உலகம்
ஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா? நடந்தது என்ன?

பிரான்சில் உள்ள பார்கோ -செர்னோ என்ற கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், ஈயை அடித்துக்கொல்ல முயன்றதில் தனது வீட்டின் ஒரு பகுதியையே எரித்துள்ளது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
80 வயதான அந்த முதியவர் இரவு உணவு உண்ண சமையலறை சென்ற போது, ஈ ஒன்று அவரை சுற்றி வந்தது. ஈ அவரை எரிச்சலூட்டவே கொசு விரட்டும் பேட் உதவியுடன் அதை கொல்ல முயன்றுள்ளார்.
அந்த சமயத்தில் அவரது வீட்டுச் சமையலறை எரிவாயு இணைப்பில் கசிவு ஏற்பட்டு இருக்க, அது தெரியாமல் அவர் கொசு விரட்டும் பேட்டை பயன்படுத்தியதால் பெரிய வெடி விபத்துடன், வீட்டின் சமையல் அறை முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. ஆனால் முதியவர் சில காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இப்போது அந்த ஊரிலேயே முதியவரை வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டு, சேதம் அடைந்து வீட்டை புனரமைக்கும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.















