இந்தியா
வெடித்து சிதறி தீப்பிடித்த மின்சார ஸ்கூட்டர்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 5 பேர்!

கர்நாடகா மாநிலம் மண்டியாவில் சார்ஜ் செய்தபோது மின்சார ஸ்கூட்டர் வீட்டில் வெடித்து தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்.

#image_title
மண்டியா மாவட்டம் வலேகெரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவர் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் ஒன்று வைத்திருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மின்சார ஸ்கூட்டரை வீட்டின் முன்பு நிறுத்தி சார்ஜிங்கில் போட்டுவிட்டு பின்னர் முத்துராஜ் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்க சென்றுவிடார். அப்போது தூங்கி கொண்டிருந்த போது திடீரென்று அந்த சார்ஜிங் செய்து கொண்டிருந்த மின்சார ஸ்கூட்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
மின்சார ஸ்கூட்டர் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ வீட்டுக்குள்ளும் பரவியது. இதனால் வீட்டில் இருந்த டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட மின் உபகரணங்கள் எரிந்து நாசமாகியது. இதனால் வீட்டில் இருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து முத்துராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
மின்சார ஸ்கூட்டர் வெடிக்கும்போது அதிர்ஷ்டவசமாக அருகில் யாரும் இல்லாததால் முத்துராஜ் உள்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.