சினிமா செய்திகள்
’பீஸ்ட்’ படத்தை முதலில் பார்த்த பிரபலம்: என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்பதை காண அனைவரும் ஆவலுடன் உள்ளனர் .
இந்த நிலையில் படத்தை முதலில் பார்த்தது இசையமைப்பாளர் அனிருத் தான் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ’பீஸ்ட்’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்ததும் முதன்முதலில் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அவரது குழுவினருக்கு தான் இயக்குனர் நெல்சன் ’பீஸ்ட்’ படத்தை போட்டு காட்டியதாகவும் படத்தை பார்த்த அனிருத்தும் அவரது குழுவினரும் நெல்சனிடம் படம் பிரமாதம் என பாராட்டினார்கள் என்றும் இந்த படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும் என்று கூறியதாகவும் நெல்சன் பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார்.
அனிருத் போலவே அனைவரும் இந்த படத்தை வரும் 13ஆம் தேதி பார்த்து பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




