சினிமா
‘லியோ’ படப்பிடிப்பை முடித்த சஞ்சய்தத்!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ‘லியோ’ படத்தில் தனக்கான போர்ஷனை முடித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின் என்ப் பலரும் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘லியோ’. தற்போது காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந் வரக்கூடிய நிலையில் படத்தில் நடித்த இயக்குநர்கள் கௌதம் மேனன், மிஷ்கினுடைய போர்ஷன்கள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை அடுத்து கடந்த வாரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் இணைந்தார்.
இப்பொழுது ஒரு வார காலத்திற்குள் அவரது காஷ்மீர் ஷெட்யூல் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. அவருடன் இருக்கும்படியான புகைப்படத்தை, பகிர்ந்துள்ள தயாரிப்புத் தரப்பு தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ‘ மிக்க நன்றி சஞ்சய் தத் சார்! நீங்கள் மிகவும் அன்பாகவும் எளிதில் பழகக்கூடிய ஒரு நபராகவும் இருந்தீர்கள். நீங்கள் எப்பவும் போல சிறப்பாக நடித்ததை பக்கத்திலிருந்து பார்த்ததற்கும் எங்கள் அணி கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
உங்களை மறுபடியும் சென்னையில் நடக்க இருக்கும் ஷெட்யூலில் சந்திக்க ஆவலாக காத்திருக்கிறோம். மீண்டும் சந்திப்போம் சார். அன்புடன் டீம் ‘லியோ” என அந்த ட்வீட்டில் கூறியிருக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் ‘லியோ’ படக்குழு காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு விரைவில் சென்னை திரும்பவும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.