சினிமா செய்திகள்
நேற்று தம்பி, இன்று அண்ணன்: முதல்வரை சந்தித்த பிரபல நடிகர்!

தமிழக முதல்வரை நேற்று நடிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதிய நிலையில் இன்று அந்த நடிகரின் அண்ணன் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், முதல்வர் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மக்கள் மட்டுமின்றி அண்டை மாநிலத்தில் உள்ள மக்கள் மற்றும் அரசியல்வாதிகளும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆட்சியை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யான் அவர்கள் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆட்சியை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதினார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் சகோதரரும் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவி இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சந்திப்பின்போது நடிகரும் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் சில நிமிடங்கள் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






















