சினிமா
சமந்தாவை போலவே விவாகரத்துக்கு ரெடியான சிரஞ்சீவி குடும்பத்து பெண்!

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரான நாகேந்திர பாபுவின் மகளும் நடிகையுமான நிஹாரிகா கோனிடேலா தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்கு திரையுலகின் முன்னணி சினிமா குடும்பமாக கோனிடேலாவின் குடும்பம் பார்க்கப்படுகிறது.

#image_title
கடந்த 2020ல் தான் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் தலைமையில் நிஹாரிகா கோனிடேலாவுக்கு ஆந்திராவே அசந்து போகும் படி பிரம்மாண்ட திருமணம் நடைபெற்றது.
சைதன்யா ஜொன்னலகடா என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை நிஹாரிகா நடிகை சமந்தா எப்படி நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதற்கு முன் கணவரின் குடும்பப் பெயரான அக்கினினேனியை இன்ஸ்டாகிராமில் இருந்து தூக்கி எறிந்தாரோ அதே போன்ற ஒரு சம்பவத்தை நடிகை நிஹாரிகாவும் தற்போது செய்திருப்பது தான் ஐதாராபாத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.

#image_title
விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா கோனிடேலா தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
திருமணம் ஆகி 2 ஆண்டுகளிலேயே கணவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்த நிலையில், தான் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் இருந்து கணவரது பெயரை நிஹாரிகா நீக்கியுள்ளார். இதனால், இவரும் சமந்தாவை போலவே விரைவில் விவாகரத்து அறிவிப்பை அறிவிக்கப் போகிறாரா என டோலிவுட் மீடியாக்கள் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளன.