தமிழ்நாடு
தயிர் பாக்கெட்டில் இந்தி மொழி: தமிழக முதல்வர் கண்டனம்!

தயிர்ப் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையினைப் பயன்படுத்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாய்மொழி தமிழ்
எங்கள் தாய்மொழியான தமிழ் மொழியை தள்ளி வைக்கச் சொல்லும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமே தாய்மொழியைக் காக்கும் நாங்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். கட்டாய இந்தி திணிப்பை நிறுத்தி விடுங்கள். குழந்தையைக் கிள்ளி விட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னரே தொலைந்து விடுவீர்கள் என தெரிவித்துள்ளார்.
தயிர் பாக்கெட்டில் இந்தி
தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்க கூடாது என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருப்பது வைரலாகி வருகிறது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் இந்த செயல், தமிழர்களை கோபப்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் எதற்கு இந்தி வர வேண்டும். இந்தி ஒரு மொழி தான். அதனை விருப்பத்துடன் தான் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, கட்டாயமாக்க கூடாது. அது தமிழர்களின் உணர்வை பாதிக்கும்.