சினிமா
இந்தியன் -2வில் தெலுங்கு காமெடியன்!

20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமல் – ஷங்கர் கூட்டணி உருவாகியுள்ளது. இந்தியன் -2 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், ஜனவரி முதல் படப்பிடிப்பு பணிகள் துவங்கவுள்ளன.

இப்படத்தில் நடிகர் சிம்பு கமலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக கமீட் ஆவார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் தெலுங்கு திரைப்பட இயக்குநர் மற்றும் காமெடி நடிகரான வெண்ணிலா கிஷோர் காமெடியனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியன் 2 படம் இந்திய அளவில் மிகப்பெரிய அரசியலை பேசக்கூடிய படமாக உருவாகவுள்ளதாம்.


















