சினிமா செய்திகள்
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’: தீம் மியூசிக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தின் தீம் மியூசிக் வெளியாகும் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், டி இமான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்தது என்பதும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் தீம் மியூசிக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
டி இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள தீம் மியூசிக் இருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காத்திருக்கும் நிலையில் எதிர்பார்ப்பை டி.இமான் பூர்த்தி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Get ready to listen to #ET's MASSive themes ????
Releasing Today at 6 PM! @Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @VinayRai79 @sooriofficial @AntonyLRuben #EtharkkumThunindhavan #ETThemeMusic #ETfromMarch10 pic.twitter.com/OtYBGRFSIE
— Sun Pictures (@sunpictures) February 2, 2022

















