Connect with us

ஆரோக்கியம்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரீஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி. இவ்வாறான தீர்ப்பு வழங்கப்படுவது இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும்.

Published

on

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரைச் சேர்ந்த ஹரீஷ் ராணா தனது 20வது வயதில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படித்து வந்தார். ‘பேயிங் கெஸ்ட்’ ஆக ஒரு விடுதியில் தங்கி இருந்த போது கடந்த 2013-ஆம் ஆண்டு விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கட்டிப் போயுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவர்களால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்  எவ்வித முன்னேற்றமும் இல்லாமல்  உயிர் காக்கும் மருத்துவக் கருவிகளின் உதவியுடன் அவர் உயிர் வாழ்ந்து வருகிறார்.

சுவாசிக்க tracheostomy குழாயும், உணவு அளிக்க gastrojejunostomy குழாயும் பொருத்தப் பட்டுள்ளது. இவற்றின் மூலம் மட்டுமே அவர் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஹரீஷ் ராணாவுக்கான உயிர் காக்கும் கருவிகளை அகற்ற அனுமதி கோரி அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை, நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “ஹரீஷ் ராணா ஒரு காலத்தில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த திறமையான 20 வயது இளைஞர். ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து விழுந்ததால் அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

நீண்ட சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், அந்த மூளை காயம் அவரை நிரந்தரமாக ஒரு தாவரத்தைப் போல வாழ வைத்துவிட்டது. 13 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்து வருகிறார்  தூக்கம்-விழிப்பு சுழற்சியை அவர் உணர்ந்தாலும் தனக்கானவற்றை தானே செய்து கொள்ள இயலாத சூழ்நிலையில் இருப்பதால் முழுமையாக பிறரின் உதவியையே சார்ந்து உயிர் வாழ்கிறார். 13 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

‘மனிதன் வாழ்க்கையை ஏற்கிறானா என்று கடவுள் கேட்பதில்லை; அதை நீ ஏற்க வேண்டியது தான்’ – இது அமெரிக்க மதபோதகர் ஹென்றி வார்ட் பீச்சரின் வார்த்தைகள். ஒருவர் மரணத்தைத் தேர்வு செய்யலாமா என்று நீதிமன்றத்திடம் கேட்கப்படும் போது இந்த வார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

உயிர் காக்கும் சாதனங்களை அகற்றுவதற்கு இரண்டு அடிப்படைகள் இருக்க வேண்டும். 1. அந்த நடவடிக்கை மருத்துவ சிகிச்சை (Medical Treatment) எனக் கருதப்பட வேண்டும். 2. அது நோயாளியின் சிறந்த நலனுக்கானதாக (Best Interests of the Patient) இருக்க வேண்டும். இது ஹரீஷ் ராணாவுக்கு பொருந்துவதால், அவரது பெற்றோரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது’’ என தெரிவித்துள்ளனர்.

மேலும், ‘‘இதுபோன்ற ஒரு நோயாளியின் நிலையைப் பற்றி இரண்டு மருத்துவ குழுக்களின் கருத்தை ஆய்வு செய்த பிறகு அவரை கருணைக் கொலை செய்வதற்கான சட்டத்தை கொண்டு வருவது பற்றி பரிசீலிக்க வேண்டும்’’ என்று மத்திய அரசை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக பிறரை சார்ந்திருக்கும் நோயாளிகள் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மற்றவர்களால் சுமையாக கருதப்படக்கூடிய சூழல்களும் உள்ளது. என்னதான் நெருங்கிய ரத்த உறவாக இருந்தாலும் இது போன்ற சூழ்நிலைகளில் மனம் சலித்துப்பொய் மருத்துவர்களிடம் கருணைக்கொலை செய்து விடுமாறு கெஞ்சுவது இந்த உலகில் பரவலாக பல காலமாக நடக்கும் நிகழ்வாகவே இருந்து வருகிறது. ஆனால் எந்த ஒரு உயிர் காக்கம் மருத்துவரும் அவ்வாறு செய்யத் துணிவதில்லை. இது போன்ற கோரிக்கைகள் அரசாங்கங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் பல முறை வந்திருந்த போதிலும் அவை யாராலும் ஏற்கப்படாமல் இருந்து வந்தன. முதல்முறையாக இத்தகைய ஒரு தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு சட்டத் திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிறகு நீதிமன்ற கண்காணிப்பில் மருத்துவக்குழு இதற்கான நடவடிக்கையில் இறங்கி செய்ய வேண்டிய கடமையும் அந்த இறப்பை உறுதி செய்து சான்று வழங்க வேண்டியது அரசின் கடமையாகவும் இருக்கிறது.

 

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா2 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா5 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
To renew : sign in, open. Each page explains when that service is useful, what details help dispatch, and where towing near me 247 can help around dallas county.. bike events 2025 | sportsam events.