இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 11.03.2026

- 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர் பத்திரப் பதிவின் போது பான் எண் அளிப்பதில் இருந்து விலக்கு. வரும் ஒன்றாம் தேதி முதல் அமலாகிறது. புதிய வருமானவரி சட்டத் திருத்தம்.
- உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரீஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி. கண்ணியமாக மரணமடைவது அடிப்படை உரிமை என்பதை அங்கீகரித்து இவ்வாறான தீர்ப்பு வழங்கப்படுவது இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.
- தமிழ்நாடு முழுதும் கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சென்னை மாநகராட்சியும் தமிழ்நாடு அரசும் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
- கேரளம் மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில் அவரை வரவேற்கும் பதாகைகளை கொச்சி மாநகராட்சி அகற்றி வருகிறது. கேரள உயர்நீதிமன்ற தடை உத்தரவின்படி செய்யப்படுவதாக அறிவிப்பு.
- சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியாக பல்வேறு நகரங்களில் ஓட்டல்கள் அடைக்கப்பட்டு வருவது மீண்டும் கண்முன்னெ கொரோனா காலகட்டத்தை நினைவு படுத்துவதாக பொதுமக்கள் வேதனை.
- அடுத்த 3 முதல் 5 நாட்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்க வாய்ப்பு. அடுத்தவாரம் நடத்தை விதிகள் அமலாக வாய்ப்பு. – தேர்தல் ஆணையம் தகவல்.


