Connect with us

ஆரோக்கியம்

இரவு 11 மணிக்கு மேல் தூங்கினால் எடை குறையாதா? வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும் தூக்க பழக்கம் – மருத்துவர் எச்சரிக்கை!

Published

on

நமது உடல் ஒரு உயிரியல் கடிகாரம் (Biological Clock) அடிப்படையில் செயல்படுகிறது. குறிப்பாக இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றம் மற்றும் பழுதுபார்ப்பு செயல்முறைகள் மிகவும் திறமையாக செயல்படுகின்றன. இந்த நேரத்தில் தூக்கம் தாமதமானால், உடலின் இயற்கை செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுகிறது.

பொதுவாக எடை குறைப்பை நோக்கி முயற்சிப்பவர்கள் டயட், உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் நள்ளிரவுக்கு முன் தூங்குவதின் முக்கியத்துவத்தை பெரும்பாலும் புறக்கணித்து விடுகிறார்கள். இதன் விளைவாக, நல்ல உணவுமுறையைப் பின்பற்றினாலும் எடை குறையாமல் இருக்கலாம்.

இதுகுறித்து சென்னை தானேவிலுள்ள ஜூபிடர் மருத்துவமனையின் மருத்துவர் அமித் சரஃப் பேசுகையில், “பலர் சத்தான உணவுகளைச் சாப்பிட்டாலும் ஒரே எடையில் நீண்ட காலம் சிக்கி விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் சீரற்ற தூக்க பழக்கங்கள்” என்று கூறினார்.

இரவு 11 மணிக்கு மேல் தூக்கம் – உடல் எடைக்கு என்ன விளைவு?

மருத்துவர் விளக்குகையில், “இரவு 10.30 மணிக்கு பிறகு செரிமான செயல்முறை இயல்பாகவே மெதுவாக தொடங்குகிறது. இந்த நேரத்திற்கு பிறகும் விழித்திருப்பது ஸ்ட்ரஸ் ஹார்மோனான கார்டிசோல் அளவை அதிகரிக்கிறது. இரவில் கார்டிசோல் அதிகமாக இருந்தால், உணவின் தரம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், கொழுப்பு உடலில் எளிதில் குவியும் மற்றும் அதை எரிப்பது கடினமாகிறது” என்றார்.

மேலும், இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை உடல் சர்க்கரை கட்டுப்பாடு, ஹார்மோன் சமநிலை, செல் பழுதுபார்ப்பு போன்ற முக்கிய செயல்பாடுகளை மேற்கொள்கிறது. இந்த நேரத்தில் தூக்கம் இல்லாவிட்டால், வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால் மறுநாள் அதிக பசி ஏற்படுகிறது.

ஹார்மோன் சமநிலையின்மை – அதிக பசியின் காரணம்

11 மணிக்கு மேல் தொடர்ந்து தூங்க செல்வது லெப்டின் மற்றும் கிரெலின் போன்ற பசி கட்டுப்பாட்டு ஹார்மோன்களை பாதிக்கிறது. இதன் விளைவாக:

  • அதிக பசி

  • கார்போஹைட்ரேட் உணவுகளுக்கான ஏக்கம்

  • சாப்பிட்ட பிறகும் திருப்தி இல்லாத உணர்வு

  • இன்சுலின் சென்சிட்டிவிட்டி குறைவு

எனவே உடல் கொழுப்பை சேமிப்பது மிகவும் எளிதாகிவிடுகிறது என டாக்டர் சரஃப் எச்சரிக்கிறார்.

மருத்துவரின் முக்கிய ஆலோசனைகள்

  • தினமும் தூங்கும் நேரத்தை மெதுவாக இரவு 11 மணிக்கு முன் மாற்ற முயற்சிக்க வேண்டும்

  • இரவு உணவை தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டும்

  • இரவில் அதிக நேரம் விழித்திருப்பவர்கள் ஸ்கிரீன் டைமை குறைக்க வேண்டும்

  • மங்கலான விளக்குகள், லேசான சூழல் தூக்கத்திற்கு உதவும்

  • தூங்குவதற்கு முன் கனமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்

முடிவில், “எந்த அளவுக்கு சத்தான உணவுமுறையைக் கடைப்பிடித்தாலும், குழப்பமான தூக்க சுழற்சிக்கு ஈடாக அது செயல்படாது. இரவு 11 மணிக்கு முன் தூங்குவது, வளர்சிதை மாற்றத்தைச் சீராக வைத்துக் கொண்டு, எடை குறைப்பு இலக்குகளை அடைய உதவும்” என்று மருத்துவர் தெரிவித்தார்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Biolinker.me Sell digital products instantly, collect direct Stripe payments with only a 5% fee, and earn 50% commission referring products from your custom bio storefront..