சினிமா செய்திகள்
அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்!

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படம் வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி மே 1 உழைப்பாளர் தினத்துக்கு தள்ளிப்போயுள்ளது.
முன்னதாக எச். வினோத்தின் இயக்கத்தில் அஜித், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் பிங்க் படத்தின் ரீமேக் படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இதனால், முதன்முறையாக அஜித்துடன் சிவகார்த்தியேன் நேரடியாக மோத உள்ளார் என்ற நிலை உருவாகியுள்ளது.
பொங்கலன்று ரஜினியுடன் அஜித் மோதிய நிலையில், தற்போது அஜித்துடன் சிவகார்த்திகேயன் மோத உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.





















