Connect with us

சினிமா

விக்னேஷ் சிவனை வேண்டாம் என ரிஜெக்ட் செய்த சிவகார்த்திகேயன்! அதுக்கும் அவர் தான் காரணமா?

Published

on

சிறுத்தை சிவாவுடன் இணைந்த நடிகர் அஜித் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களில் நடித்தார். அதில், வீரம் மற்றும் விஸ்வாசம் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்தன.

அடுத்ததாக அ. வினோத் உடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என 3 படங்களில் தொடர்ந்து நடித்தார் இந்த மூன்று படங்களி கடைசியாக வந்த துணிவு படம் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக மாறியது.

#image_title

இந்நிலையில், அடுத்ததாக அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என எதிர்பார்த்த பலருக்கும் பலத்த ஏமாற்றமாக அந்த படத்தில் இருந்தே விக்னேஷ் சிவனை அஜித் நீக்கி விட்டார்.

இயக்குநர் மகிழ் திருமேனி தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக சினிமா வட்டாரத்தில் உறுதியான தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுவரை அது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் லைகா நிறுவனமோ அல்லது மகிழ் திருமேனி தரப்போ உறுதிபடுத்தவில்லை. அதே சமயம் மறுக்கவும் இல்லை.

#image_title

மறுபக்கம் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்திற்கான நடிகரை தேடும் வேட்டையில் தீவிரம் காட்டி வருகிறார். மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து படம் பண்ணுங்க என ரசிகர்களே சொல்லி வந்தாலும், பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு செம ஜாலியான படத்தைக் கொடுக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளார்.

ஆனால், பிரதீப் ரங்கநாதன் தான் ஹீரோ என தயாரிப்பாளர்களிடம் சென்று விக்னேஷ் சிவன் சொல்லி வரும் நிலையில், அட்லீஸ்ட் சிவகார்த்திகேயனையாவது வைத்து படம் பண்ணலாமே என பணம் போடுவர்கள் மார்க்கெட் ரீதியாக சற்று யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

#image_title

சிவகார்த்திகேயனை அணுகியும் விக்னேஷ் சிவன் கதை சொல்லி விட்டாராம். ஆனால், இப்போதைக்கு தான் ரொம்பவே பிசியாக இருப்பதாக சொல்லி விக்னேஷ் சிவன் கோரிக்கையை சிவகார்த்திகேயன் நிராகரித்து விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கைவசம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் பேனரில் உள்ள படம் தான் சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவன் படத்தை வேண்டாம் என சொல்ல காரணம் என சொல்லப்பட்டாலும், அஜித் மீதுள்ள அளப்பரிய பாசம் தான் இப்படி பிரச்சனை விக்னேஷ் சிவனுக்கும் அஜித்துக்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கும் போது குறுக்கே இந்த கெளஷிக் வந்தால் சரியாக இருக்காது என்கிற உஷாரான யோசனையுடன் சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவனை நைசாக கழட்டி விட்டுள்ளார் என்கின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Yesterday’s soccer scores. army jobs. Regular 2024 exam.