Connect with us

சினிமா செய்திகள்

விஜய் படத்தின் வாய்ப்பை பெறும் மற்றொரு சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!

Published

on

நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாகத்தான் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த மற்றொரு திரைப்படமான டான் படத்தை சமீபத்தில் விஜய் பார்த்ததாகவும் அந்த படத்தை பார்த்து விஜய் ஆச்சரியம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ‘டான்’ படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்த விஜய் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது சமீபத்தில் டான் படத்தை விஜய் பார்த்ததாக செய்திகள் வெளியான நிலையில் அந்த படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்ததாக கூறப்படுகிறது .

இப்படி ஒரு முழு நீள காமெடி படத்தில் இதுவரை நடக்கவில்லை என்றும் எனவே சிபிச் சக்ரவர்த்தியிடம் தனக்காக ஒரு முழுநீள நகைச்சுவை திரைக்கதையை தயார் செய்யும்படி கூறியதாகவும் தெரிகிறது .

தற்போது விஜய் 66 வது படத்தில் நடித்து வரும் நிலையில், 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதனை அடுத்து 68 வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Exportador de bolsas de lona de algodón de la mejor calidad.