சினிமா செய்திகள்
‘டாக்டர்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்!

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீரென ஒத்தி வைக்கப்பட்டது என்பதும், தேர்தல் காரணமாகத்தான் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப் பட்டதாகவும் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.
ஆனால் அதே நேரத்தில் ‘டாக்டர்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘டாக்டர்’ படம் வரும் ரமலான் பண்டிகையின்போது வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது/ எனவே ‘டாக்டர்’ திரைப்படம் மே 14-ஆம் தேதி வெளியாகும் என தெரியவந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் செய்தி வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
We're bringing #DoctorForRamzan ????
Get ready to meet Dr. Varun & Co in theaters this Ramzan ????
In the meantime, we urge you to go vote. See you in the Cinemas ????️@Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl @DoneChannel1 @proyuvraaj @gobeatroute #Doctor pic.twitter.com/tGcyNi47d2— KJR Studios (@kjr_studios) March 11, 2021



















