சினிமா செய்திகள்
சிவராத்திரி தினத்தில் ஈஷா மையத்தில் குவிந்த பிரபல நடிகைகள்!

ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி தினத்தில் கோவை அருகே வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஈஷா யோகா மையத்தில் பிரபல நடிகைகள் வருகை தருவார்கள் என்பது தெரிந்ததே.
குறிப்பாக நடிகைகள் காஜல் அகர்வால், நடிகை தமன்னா, நடிகை அதிதி ராவ் ஹைதரி ஆகியோர்கள் இந்த மையத்திற்கு வரும் வழக்கமான பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிவராத்திரி தினத்தில் இந்த நடிகைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வருடமும் இன்று சிவராத்திரி தினம் கொண்டாடப்படுவதை அடுத்து ஈஷா மையத்தில் குவிந்துள்ளனர்.
தமன்னா, காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர்கள் ஈஷா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான சிவன் சிலை முன் எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு முழுவதும் விடிய விடிய ஆன்மீக நிகழ்ச்சிகள் ஈஷா மையத்தில் நடைபெற இருப்பதை அடுத்து நடிகைகளும் அதில் பங்கு பெறுவார்கள் என்று தெரிகிறது.





















