சினிமா செய்திகள்
அஜித், விஜய் சம்பளத்தை நெருங்கிய விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன்!

தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் மட்டுமே அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரது சம்பளம் 50 கோடிக்கும் மேல் உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் ரஜினி, கமல் ,அஜித், விஜய் ஆகிய நான்கு நடிகர்களும் மிகப்பெரிய அளவில் சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டது. இதனை அடுத்து தற்போது தொடர்ச்சியாக ஹிட் படங்கள் கொடுத்து வரும் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர்களின் சம்பளமும் உயர்ந்துள்ளது.
விஜய் சேதுபதி தற்போது தமிழ் உள்பட தெலுங்கு பாலிவுட் என நடித்துக் கொண்டிருப்பதால் வில்லனாக இருந்தாலும் சரி கதாநாயகனாக இருந்தாலும் சரி ஒரு படத்திற்கு ஐம்பது கோடி என்று சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்கள் தொடர் வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை 60 கோடிக்கு மேல் உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது .
சூர்யா தனுஷ் ஆகியோர் இன்னும் 50 கோடிக்கு குறைவாகவே சம்பளம் வாங்கி வரும் நிலையில் விஜய் சேதுபதி மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரது சம்பளம் உச்சத்திற்கு சென்று உள்ளது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.