சினிமா செய்திகள்
சரவணா ஸ்ட்ரோ அதிபரின் ‘தி லெஜண்ட்’ பாடல்: செம வைரல்

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜன்ட் சரவணா நடித்த ’தி லெஜன்ட்’ என்ற திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற வாடிவாசல் என்ற பாடல் வெளியாகி உள்ளது. சரவணன் மற்றும் ராய்லட்சுமி நடனத்தில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு ராஜு சுந்தரம் நடன இயக்குனராக இருந்து பணிபுரிந்துள்ளார்.
ஜொனிதா காந்தி மற்றும் பென்னி தயால் பாடிய இந்த பாடலை சினேகன் எழுதியுள்ளார். இந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஏராளமான பொருட்செலவில் கோவில் திருவிழா நடைபெறும் இடத்தில் படமாக்கப்பட்டுள்ள இந்த பாடல் நிச்சயம் திரையரங்கில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் மற்ற பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.