வணிகம்
மத்திய அரசு அதிரடி… லட்சக்கணக்கான ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு!

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Chief Labour Commissioner அலுவலகம், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு முக்கிய நிவாரணத்தை அறிவித்துள்ளது. புதிய உத்தரவின் படி, Variable Dearness Allowance (VDA) திருத்தப்பட்டுள்ளதால் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய ஊதிய உயர்வு 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. தொழிற்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI) உயர்ந்ததன் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 31 நிலவரப்படி CPI குறியீடு 413.52 இலிருந்து 424.80 ஆக உயர்ந்துள்ளது.
யாருக்கு ஊதிய உயர்வு?
ரயில்வே சரக்கு கிடங்குகள், பார்சல் அலுவலகங்கள், கிடங்குகளில் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், பாதுகாப்பு காவலர்கள், விவசாய மற்றும் கட்டுமானத் துறை தொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்த உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
புதிய குறைந்தபட்ச ஊதிய விவரம்
ரயில்வே சரக்கு கிடங்கு மற்றும் தூய்மை பணியாளர்கள்
- Category ‘A’ நகரங்கள் – தினசரி ரூ.827
(அடிப்படை ஊதியம் ரூ.523 + VDA ரூ.304) - Category ‘B’ நகரங்கள் – தினசரி ரூ.693
(அடிப்படை ஊதியம் ரூ.437 + VDA ரூ.256) - Category ‘C’ நகரங்கள் – தினசரி ரூ.556
(அடிப்படை ஊதியம் ரூ.350 + VDA ரூ.206)
பாதுகாப்பு காவலர்களுக்கு எவ்வளவு?
ஆயுதமில்லா பாதுகாப்பு காவலர்கள்
- A Category நகரங்கள் – ரூ.1,008
- B Category நகரங்கள் – ரூ.918
- C Category நகரங்கள் – ரூ.781
ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு காவலர்கள்
- A Category நகரங்கள் – ரூ.1,094
- B Category நகரங்கள் – ரூ.1,008
- C Category நகரங்கள் – ரூ.918
A, B, C நகரங்கள் என்றால் என்ன?
தொழிலாளர் அமைச்சகத்தின் 2017 ஜனவரி 19 அறிவிப்பின் அடிப்படையில் நகரங்கள் A, B மற்றும் C என பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத், லக்னோ, நோய்டா போன்ற முக்கிய நகரங்கள் A Category-யில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த புதிய ஊதிய உயர்வு மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


















