சினிமா செய்திகள்
விக்ரமின் ‘கோப்ரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சியான் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படத்தில் விக்ரமுக்கு பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புக்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை நேரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது .
விக்ரம் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் சுதந்திர தின விடுமுறை தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.