சினிமா செய்திகள்
மாஸ் காட்டும் சிம்புவின் ரெட் கார்டு பாடல்!

சிம்புவுக்கும் விஷாலுக்கும் சமீபத்தில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால், சிம்புவுக்கு ரெட் கார்டு கொடுக்க திட்டமிட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் ஹிப் ஹாப் இசையில் சிம்புவுக்கு உருவாக்கப்பட்ட பாடல் ஒன்றில் எனக்கா ரெட்கார்டு எடுத்துப்பாரு ரெக்கார்டு என்ற வரிகளில் பாடம் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியாகி சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
பாடலாசிரியர் அறிவு எழுதியுள்ள இந்த பாடலை சிம்புவே பாடியுள்ளார். இந்த பாடலில் சிம்புவுடன் இணைந்து மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா நடனமாடியுள்ளனர்.



















