சினிமா செய்திகள்
சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் சூப்பர் அப்டேட்!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை மற்றும் மும்பையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளதாக சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் அட்டகாசமான புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
அந்த புகைப்படத்தில் சிம்பு ஆக்ரோஷமாக துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் ஸ்டைலில் உள்ளதை அடுத்து சிம்பு ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். சிம்பு ஜோடியாக பிரபல கன்னட நடிகை கயடு லோஹர்என்பவர் நடித்து வருகிறார்.
இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
#VendhuThanindhathuKaadu pic.twitter.com/ln975jOl2J
— Silambarasan TR (@SilambarasanTR_) December 7, 2021





