சினிமா செய்திகள்
சிம்பு படத்தின் டீசரை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிம்பு நடித்த படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பு-ஹன்சிகா நடிப்பில் ஜமீல் என்பவர் இயக்கிய திரைப்படம் ’மஹா’. இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று தற்போது தான் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் ஜூலை 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு பிரபல நடிகர் படத்தின் டீசரை இன்னொரு பிரபல நடிகர் வெளியிடுவது வழக்கமாக இருந்துவரும் நிலையில் தற்போது சிம்புவின் பட டீஸரை சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு, ஹன்சிகா, ஸ்ரீகாந்த், சனம் ஷெட்டி, தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் இந்த படம் நடிகை ஹன்சிகாவின் 50வது படம் என்பதும் இசையமைப்பாளர் ஜிப்ரான் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
We are very happy to release teaser will be @Siva_Kartikeyan by tomorrow @6Pm#maha #hansika50th
@malikstreams @ihansika @SilambarasanTR_ @Etceteraenter @ghibranofficial @MathiyalaganV9 @Act_Srikanth@ranjeetckedit@anjuvijai@DoneChannel1@murukku_meesaya@starmusicindia pic.twitter.com/WQuaOgGSoM
— Etcetera Entertainment (@Etceteraenter) July 1, 2021















