சினிமா
பைக் மீது கெத்தாக சிம்பு…வெந்து தணிந்தது காடு ஷூட்டிங் அப்டேட்…

மாநாடு படத்திற்கு பின் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இப்படம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ஆச்சர்யத்தை கொடுத்தது. ஏனெனில், சிம்பு இதற்கு முன் இருந்தவாறு இல்லாமல் வேறு மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பது புகைப்படங்களை பார்த்தலே புரிந்தது.

இந்நிலையில், என்ஃபீல்டு பைக் மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் சிம்பு ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.

















