சினிமா செய்திகள்
‘ஷகீலா’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. எப்படி இருக்கு?
Bold and fearless.
— TheRichaChadha (@RichaChadha) November 20, 2018
PRESENTING THE FIRST LOOK OF #Shakeela! @lankeshindrajit @ShakeelaFilm pic.twitter.com/SJx1oCea6q
ஷகீலாவின் வழக்கை வராலாறு குறித்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் தனது கவர்ச்சியால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வந்த ஷகீலாவின் பெயரிலியே இந்தப் படம் தயாராகியுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை ஷகீலா வேடத்தில் நடித்துள்ள ரிச்சா சட்டாவே தனது டிவிட்டர் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார். அந்தப் போஸ்டரில் உடல் முழுக்க ஆபரண நகைகளால் கவரப்பட்டது போன்று போஸ் கொடுத்துள்ள ரிச்சா சட்டா. அவர் பின்பக்கம் இருக்கும் சுவரில் ஷகீலாவை பற்றிய கேவலமான வாசகங்கள் உள்ளது.

தான் தனது தாயின் பேராசையினால் வேண்டும் என்றே கவர்ச்சி பாதையில் தள்ளப்பட்டதாக ஷகீலா பல முறை தெரிவித்துள்ளார். தற்போது ஷகீலா கவர்ச்சி படங்களில் நடிப்பதை தவிர்துவிட்டு சில படங்களில் காமெடி தோற்றங்களில் மட்டும் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
2019 கோடைக்கு இந்தப் படம் திரைக்கு வரும் என்றும் போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.
















