ga('set', 'anonymizeIp', 1);
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்ரம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் ஒட்டுமொத்த தமிழர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விடுதலைக்குப்பின் பேரறிவாளன் செய்தியாளர்களை சந்தித்தபோது அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்“ என்ற திருக்குறளை கூறி மேற்கோள்காட்டி நல்லவர்கள் வாழ வேண்டும் என்பது இயற்கையின் நியதி என்றும் எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல என்றும் கூறினார்.
மேலும் சிறையில் இருந்தபோது மக்சீம் கார்க்கியின் தாய் என்ற நாவலை நான்கு முறை படித்துள்ளேன் என்றும் அந்த நாவலை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் தனக்கு தைரியம் வந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருவட்டார் ஊராட்சி…
தமிழகத்தில் கடந்த…
This website uses cookies.