தமிழ்நாடு
வேட்பாளரிடம் பணத்தை வாங்குங்கள்: சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்!

அனுமதியின்றி ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றிவிட்டு அதற்கான செலவை வேட்பாளரிடம் வாங்குங்கள் என சென்னை ஐகோர்ட் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சியினர் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
குறிப்பாக அரசு அலுவலங்களின் சுவர்களிலும், அனுமதி பெறாத தனியார் சுவர்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த வழக்கு இன்று சென்னை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது விதியை மீறி தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களை உடனடியாக சென்னை மாநகராட்சி அகற்ற வேண்டும் என்றும் அவ்வாறு அகற்றிவிட்டு அதற்கான செலவுகளை வேட்பாளர்களிடம் வசூல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

















