சினிமா செய்திகள்
ராகவா லாரன்ஸ் நடித்த ‘ருத்ரன்’ படப்பிடிப்பு நிறைவு.. ரிலீஸ் எப்போது?

ராகவா லாரன்ஸ் நடித்திருக்க கூடிய ‘ருத்ரன்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
‘ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’ போன்ற படங்களைத் தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாக கூடிய படம் ‘ருத்ரன்’.
ராகவா லாரன்ஸ் ப்ரியா பவானி சங்கர், சரத்குமார் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இதன் படப்பிடிப்பு மொத்தமாக முடிவடைந்துள்ளதை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில், இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘பத்துதல’, ‘அகிலன்’ ஆகிய படங்களை தொடர்ந்து இந்த வருடம் வெளியாகும் ப்ரியா பவானி ஷங்கரின் மூன்றாவது படம் இது என்பதும் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.