சினிமா
ஏ.ஆர். ரஹ்மான் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட மகேஷ் பாபு.. இந்த காம்போவுல ஒரு படம் வந்தா!

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மகேஷ் பாபு இருவரும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
டோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறார் நடிகர் மகேஷ் பாபு. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான சர்காரு வாரி பாட்டா திரைப்படம் விமர்சன ரீதியாக படு தோல்வியை சந்தித்தது.
கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி நடித்த அந்த படத்தை கீதா கோவிந்தம் புகழ் பரசுராம் இயக்கி இருந்தார்.

#image_title
அடுத்ததாக த்ரிவிக்ரம் உடன் இணைந்து மகேஷ் பாபு நடித்து வரும் படம் பக்கா மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், ராஜமெளலி இயக்கத்தில் 500 கோடி பட்ஜெட்டில் ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவுக்கு மகேஷ் பாபுவை வைத்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய படத்தை ஆரம்பிக்க உள்ளனர்.
அதற்காக நடிகர் மகேஷ் பாபு தனது உடம்பை சிக்ஸ் பேக் உடம்பாக மாற்ற ஜிம்மே கதியென கிடந்து வருகிறார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் மகேஷ் பாபு மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் எடுத்துக் கொண்ட செல்ஃபியை இசைப்புயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகேஷ் பாபு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்.
இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானை இசையமைப்பாளராக போட்டு இன்னொரு ஆஸ்கரை வாங்குங்கோ என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.