சினிமா செய்திகள்
தளபதி விஜய்யின் இரு ரகசியங்கள்; ரசிகர் மன்ற முன்னாள் தலைவர் ‘பகீர்’ தகவல்!

விஜய்யின் ‘மக்கள் இயக்கம்’ ரசிகர் மன்றத்தில் முக்கியப் பதவியில் இருந்த ரவி ராஜா, திடுக்கிடும் சில ரகசியங்கள் வெளியிடப்படும் என்று எச்சரித்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையில் அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து தொடர்ந்து உரசல் நீடித்து வருகிறது. விஜய் பெயரில் முன்னர் அவர் கட்சித் தொடங்க பார்த்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய், காட்டமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இதையடுத்து தன் பெயரிலேயே ‘அப்பா எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம்’ என்ற புதிய கட்சியைப் பதிவு செய்துள்ளார் சந்திரசேகர். இந்தக் கட்சியில் விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகியான ரவி ராஜா இணைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் கொதிப்படைந்த விஜய் தரப்பு, அவரை மக்கள் இயக்கம் பொறுப்புகளிலிருந்து நீக்கியது.

இதனால் விஜய்க்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ள ரவி ராஜா, அவருக்கே தெரியாத இரண்டு ரகசியங்களை வெளியிடுவேன் என்று எச்சரித்துள்ளார். இதனால் மக்கள் இயக்கத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.












