சினிமா
வில்லன் நடிகரை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்; இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?

பாரதி படத்தில் பாரதியாராக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகர் ஷாயாஜி ஷிண்டே. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர், சியான் விக்ரமின் தூள், ரஜினிகாந்தின் பாபா உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.
சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஆளே டோட்டலாக சேஞ்ச் ஆகி ஹாசினிக்கு அப்பாவாக நடித்து குவாட்டர் கோயிந்தனாக காமெடியில் கலக்கினார்.

#image_title
குணசித்ர நடிகராக உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலும் இவர் நடித்துள்ளார். ஹன்சிகாவின் போலீஸ் அப்பாவாக வந்து அந்த படத்திலும் காமெடியில் கலக்கி இருப்பார்.
இப்படி கொடூர வில்லனாகவும் குணசித்ர நடிகராகவும் இருக்கும் ஷாயாஜி ஷிண்டே சமூக ஆர்வலராக மரங்களை பாதுகாக்கும் பணியை தனது மாநிலமான மகாராஷ்ட்ராவில் செய்து வருகிறார்.

#image_title
சாதாரா மாவட்டத்தில் உள்ள புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவுப் பணிக்காக மரங்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில், சமூக ஆர்வலரான ஷாயாஜி ஷிண்டே அந்த மரங்களை வேறு ஒரு இடத்துக்கு இடமாற்றம் செய்து அதனை அழியாமல் பாதுகாத்து வருகிறார்.
தாஸ்வாடே எனும் பகுதியில் நேற்று முன் தினம் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஒரு மரத்தில் இருந்த தேன்கூடு கலைந்த நிலையில், அதிலிருந்த தேனீக்கள் ஷாயாஜி ஷிண்டேவையும் அவரது நண்பரையும் விரட்டி விரட்டிக் கொட்டியதில் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட ஷாயாஜி ஷிண்டே தற்போது தான் நலமாக இருப்பதாகவும் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். சீக்கிரம் பழையபடி குணமாகி உங்க சோஷியல் சர்வீஸை பண்ணுங்க ஷாயாஜி ஷிண்டே என ரசிகர்கள் குணமடைய வாழ்த்தி வருகின்றனர்.