கேலரி
புடவையிலும் நீ வேற லெவல்!… ரசிகர்களை ஏங்க வைத்த ரித்திகா சிங்…

மணிரத்தினத்திடம் உதவியாளராக பணிபுரிந்த சுதா கொங்கரா இயக்கிய திரைப்படம் இறுதிச்சுற்று. இப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்தவர் ரித்திகா சிங். இவர் உண்மையிலேயே குத்துச்சண்டை வீரர் என்பதால் இப்படத்தில் அவர் அசத்தியிருந்தார்.
அதோடு, முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, இப்படத்தில் இவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. எனவே, அவரை தேடி சினிமா வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

இவர் நடித்த பாக்சர் உள்ளிட்ட சில திரைப்படங்கள் பாதியிலேயே நிற்கிறது. தமிழ் மட்டுமில்லாமல் ஒரு ஹிந்தி திரைப்படத்திலும், இரண்டு தெலுங்கு படத்திலும் அவர் நடித்துள்ளார்.

ஒருபக்கம் அழகான உடைகளை உடுத்தி போட்டோஷுட் செய்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுவும் சமீபகாலமாக மிக அதிகமான போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியாக புடவை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.














