Connect with us

ஆரோக்கியம்

2 இட்லிக்கு மாற்றாக இந்தப் பழங்களை சாப்பிடுங்க: உடல் எடை குறைய டாக்டர் உஷா நந்தினி ஆலோசனை!

Published

on

உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான வழிகளை தேடும் அனைவருக்கும் டாக்டர் உஷா நந்தினி பயனுள்ள ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 2 இட்லிக்கு பதிலாக இதய ஆரோக்கியத்திற்கும், உடல் எடையை குறைக்கவும் உதவும் சில பழங்களை உணவில் சேர்க்குமாறு அவர் அறிவுறுத்துகிறார்.

பழங்களின் நன்மைகள்:
பழங்கள் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. இதனால், இது இடுப்பு சுற்றி உள்ள கொழுப்புகளை குறைத்து, பி.எம்.ஐ மற்றும் இதய நோய்களின் அபாயத்தை தடுக்கும்.

உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்:

  1. பேரிக்காய்:
    பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தரும். காலை வெறும் வயிற்றில் பேரிக்காயை சாப்பிடுவதால் கூடுதல் உணவைத் தவிர்க்க முடியும், உடல் எடை குறையும்.
  2. தர்பூசணி:
    வைட்டமின் சி மற்றும் தண்ணீரின் சிறந்த மூலமாக இருக்கும் தர்பூசணி, உடல் எடையை மட்டுமே அல்லாமல் இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவும்.
  3. எலுமிச்சை:
    எலுமிச்சை தோலின் சாறு உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும். தொடர்ந்து 11 நாட்கள் எலுமிச்சை சாறு எடுத்துக்கொண்டால், பி.எம்.ஐ, இடுப்பு சுற்றளவு மற்றும் உடல் கொழுப்பு சதவிகிதம் குறையும்.
  4. ஆப்பிள்:
    ஆப்பிள் நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்தது. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவது அல்லது அதன் சாறை அருந்துவது உடல் எடை குறைக்க உதவும்.
  5. பப்பாளி:
    பப்பாளி வைட்டமின்கள், கால்சியம், மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துகளால் நிரம்பியுள்ளது. காலை வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவது மட்டும்  சருமத்திற்கும் நன்மை தருகிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Scale your rankings with free backlinks & website citations.