ஆரோக்கியம்
ராயலசீமா ஸ்பெஷல்: சுவையான பருப்பு சாதமும் வேர்க்கடலை சட்னியும் செய்வது எப்படி?

ராயலசீமா ஸ்பெஷல்: சுவையான பருப்பு சாதமும் வேர்க்கடலை சட்னியும் செய்வது எப்படி?
ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் பிரசித்தி பெற்ற பாரம்பரிய உணவுகளில் முக்கியமானது பருப்பு சாதம் மற்றும் வேர்க்கடலை சட்னி. சுலபமாக சமைக்கக் கூடியதும், உடலுக்கு ஆரோக்கியமளிக்கக் கூடியதும் இந்த உணவு, ஒரு முழுமையான சத்தான உணவாகும்.
🔸 வேர்க்கடலை சட்னி செய்முறை:
ஒரு கப் வேர்க்கடலையை தோல் நீக்காமல் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
அதே கடாயில், 2 நறுக்கிய தக்காளி, 7 பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லி விதை, பூண்டு, சிறிது புளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு மென்மையாகியதும், புதிதாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
வறுத்த வேர்க்கடலை குளிர்ந்ததும், அதன் தோலை நீக்கி கொரகொரப்பாக அரைக்கவும்.
வதக்கிய கலவையைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைஸாக அரைத்தெடுக்கவும்.
மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறலாம்.
💡 குறிப்புகள்: இந்த சட்னி சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற எந்த உணவுடன் சேர்ந்தாலும் நன்றாகச் சேரும்.
🔸 பருப்பு சாதம் செய்முறை:
கால் கப் பாசிப்பருப்பை வறுத்து கொள்ளவும்.
அதனுடன் அரை கப் அரிசியை சேர்த்து நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
கடாயில் நெய், எண்ணெய் சேர்த்து சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம் தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
இப்போது ஊறவைத்த அரிசி–பருப்பு கலவையுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து சமைக்கவும்.
சாதம் வெந்து, தண்ணீர் வற்றியதும் பருப்பு சாதம் தயார்.
💡 பரிமாறும் பரிந்துரை: இந்த சாதத்துடன் வேர்க்கடலை சட்னி சேர்த்தால் அதன் சுவை இரட்டிப்பாகும்!

