சினிமா
ராஷ்மிகா மந்தனா: அழகு என்று யாரையும் இங்கு சொல்ல முடியாது!

தன்னுடைய உடல் குறித்தான கேலிகளுக்கும், அழகு பற்றியும் ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார்.
சினிமாவை பொருத்தவரை உடல் கேலிகளை பெருமளவில் நடிகைகள்தான் எதிர்கொண்டு வருகின்றனர். அதில் சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தானா உடல் கேலியை எதிர்கொண்டார். சில சமயங்களில் நான் ஆண் போன்று இருப்பதாகவும் திடீரென்று உடல் பருத்து விட்டேன் என்றும் எப்படி இருந்தாலும் என் மீது கேலிகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது என்று தன் மீதான கேலிகளுக்கு பதில் கொடுத்துள்ளார்.
உடல் கேலி குறித்து பேசிய அவர் இப்போது அழகு பற்றியும் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் மேலும் விரிவாக பேசி இருக்கிறார், “அழகு என்று யாரையும் இங்கு உதாரணமாக சொல்ல முடியாது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான அழகு இங்கு இருக்கும். ஒவ்வொரு நாளும் நான் கண்ணாடி முன்பு நிற்கும் பொழுது நான் அழகாக இருக்கிறேனா ஆரோக்கியமாக இருக்கிறேனா என்பதை மட்டுமே நினைப்பேன்.
சிலர் உடல் ஏற்றினால் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். அவசியம் இல்லையெனில் நாம் யாருக்காகவும் மாற வேண்டும் என்று தேவை கிடையாது. நான் என் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அழகும் அப்படித்தான்” என்று பேசியுள்ளார் ராஷ்மிகா.