சினிமா
‘லால் சலாம்’ படத்தில் நடிக்கும் செல்வராகவன்?

‘லால் சலாம்’ படத்தில் இயக்குநர் செல்வராகவன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் இந்தத் திரைப்படத்தின் பூஜை தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு ஹோலி அன்று தொடங்கியது.
நடிகர் ரஜினிகாந்த் என பெயர் மாற்றப்பட்ட அந்த நாளில் இந்த படத்தைத் தொடங்குவது தனக்கு மகிழ்ச்சியுடன் இருப்பதாக ஐஸ்வர்யா பகிர்ந்திருந்தார். ‘ஜெயிலர்’ படத்தை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் இணைய இருக்கிறார். தற்போது, இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவனும் நடிக்க இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா இதற்கு முன்பே செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் என்பதை குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட செல்வராகவனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். செல்வராகவன் இந்தப் படத்தில் இணைய இருப்பதை விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.