வணிகம்
முதியோர் ஓய்வூதியத் திட்டம்: மாதம் ரூ.1000 வரை ஓய்வூதியம் பெறுவது எப்படி?

மத்திய அரசு வழங்கும் தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.1000 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. வருமானமின்றி வாழும் முதியவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பாக மாற்றும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் முதன்முதலில் 1995ஆம் ஆண்டு, தேசிய சமூக உதவித் திட்டத்தின் (NSAP) ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு, இதன் பெயர் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் என மாற்றப்பட்டது.
ஓய்வூதியத் தொகை விவரம்:
60 முதல் 79 வயது வரை உள்ளவர்களுக்கு:
மாதம் ரூ.300 முதல் ரூ.1000 வரை.
இதில் ரூ.200 மத்திய அரசிடம் இருந்து, மீதி மாநில அரசிடம் இருந்து வருகிறது.80 வயது மற்றும் அதற்கும் மேல் உள்ளவர்களுக்கு:
மாதம் ரூ.500 வரை மத்திய அரசிடம் இருந்து வழங்கப்படும்.
தகுதி விவரம்:
விண்ணப்பதாரர் 60 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
BPL (வறுமைக் கோடுக்கு கீழ்) வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
குடும்பத்தில் 20 வயதுக்கு மேல் மகன் அல்லது பேரன் இருப்பினும், அவர்கள் BPL-ஆக இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
சில மாநிலங்களில் BPL இல்லாவிட்டாலும் மாநில அரசு முழு உதவித் தொகையை வழங்கும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
http://pensions.samagra.gov.in/ignoapdetails.aspxநேரில் விண்ணப்பிக்க:
தங்கள் மாவட்ட RTPS அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
வயது சான்றிதழ்
அடையாள அட்டை (Aadhaar)
வருமான சான்றிதழ்
BPL அட்டையில் பெயர்
