Connect with us

இந்தியா

முதல்முறையாக நீட் தேர்வு எழுத போகிறீர்களா? இதையெல்லாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்!

Published

on

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த சில நாள் வருடங்களாக நடந்து வருகிறது என்பதும் இந்த நீட் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பை படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் நீட் தேர்வை எதிர்த்து வந்தாலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என மத்திய அரசு உறுதி பெற கூறியிருக்கிறது. எனவே நீட் தேர்வை எதிர்த்தாலும் தமிழ்நாடு மாணவர்களும் நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பு இந்த நீட் தேர்வை நடத்தி வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் ரிஜிஸ்டர் செய்ய வேண்டியது அவசியம் என்பதால் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் ரிஜிஸ்டரை தொடங்குவது எப்போது? என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக அடுத்த வாரம் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு இருக்கக்கூடிய தகுதிகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

2023ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் 10+2 அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல்/உயிர்-தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் சம அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அவர்கள் தகுதித் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்/உயிர் தொழில்நுட்பம் ஆகியவற்றில் மொத்தமாக குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

நீட் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. எனினும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது ஜனவரி 31, 2023 அன்று 17 வயதாக இருக்க வேண்டும்.

2023 நீட் தேர்வுக்கு பதிவு செய்வது எப்படி?

தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணையதளம் சென்று NEET UG 2023 பதிவு இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் உள்நுழைவு சான்றுகளை உருவாக்கி உள்நுழைய வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு கவனமாக சரிபார்க்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை எதிர்கால குறிப்புக்காக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?