இந்தியா
நீட் தேர்வில் 99.30% மதிப்பெண்.. ஆனாலும் மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை.. ஏன்?

நீட் தேர்வில் 99.30 சதவீத மதிப்பெண் எடுத்தும் எம்பிபிஎஸ் சீட் கிடைக்காத ஒரு மாணவன் குறித்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இளநிலை மருத்துவ படிப்புக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த நீர் தேர்வில் கிடைத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நீட் தேர்வில் கேரள மாணவர் நஜிஹ் சர்ப்ராஸ் காலித் என்பவர் 99.30 சதவீதம் மதிப்பெண் பெற்று புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நிலையில் திடீரென அவரது தேர்வை ரத்து செய்து மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் கேரளாவை சேர்ந்த நஜிஹ் சர்ப்ராஸ் காலித் என்பவர் 99.30 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று புதுச்சேரி ஜிப்மர் கல்லூரியில் தனது இடத்தை உறுதி செய்தார். அவர் எடுத்த மதிப்பெண்ணுக்கு அவர் இந்தியாவில் வேறு எந்த கல்லூரியில் கேட்டிருந்தாலும் அவருக்கு கிடைத்திருக்கும். ஆனால் அவர் புதுவை ஜிப்மர் கல்லூரியை தேர்வு செய்தார்.
இந்த நிலையில் அவர் தவறான தகவல்களை கொடுத்து எம்பிபிஎஸ் சீட் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அது குறித்து விசாரணை செய்த மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி அவரது தேர்வை ரத்து செய்து அவருக்கு பதிலாக சாமிநாதன் என்ற மாணவருக்கு ஜிப்மர் கல்லூரியில் மருத்துவ கல்லூரி இடம் கொடுத்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நஜிஹ் சர்ப்ராஸ் காலித் விதிமுறைகளை மீறி சீட் பெற்றுள்ளார் என்றும் அவர் கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலத்தில் இருந்து குடியிருந்து வருகிறார் என்பதும் யூனியன் பிரதேச விதிகளின்படி இது முறையற்றது என்றும் காரணமாக அவரது சேர்க்கை ரத்துக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களில் வசிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது தான் அவரது தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு காரணமாக தெரிகிறது.