இந்தியா
சகோதரரின் திருமணத்திற்காக பிரிட்டனில் இருந்து பறந்து வந்த பெண்.. வைரல் வீடியோ
Published
3 days agoon
By
Shiva
தனது சகோதரரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த பெண் ஒருவரின் வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆக வருகிறது.
பிரிட்டன் நாட்டில் உள்ள இந்திய பெண் ஒருவர் தனது சகோதரர்களின் திருமணத்திற்கு சஸ்பென்ஸ் ஆக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கிளம்பி வந்துள்ளார். விமான நிலையத்தில் அவர் விமானத்தில் ஏறுவது முதல் விமானத்தில் பயணம் செய்வது உள்பட வரிசையாக அவர் எடுத்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து அவர் கல்யாண மண்டபத்திற்குள் நுழையும்போது அவரைப் பார்த்ததும் அவரது அம்மாவும் அப்பாவும் துள்ளி குதித்து தங்கள் மகளை கட்டிப்பிடித்து வரவேற்றனர். அதேபோல் மாப்பிள்ளை கோலத்தில் மணவறையில் உட்கார்ந்திருந்த அவரது சகோதரர் திடீரென அக்காவை பார்த்ததும் எழுந்து நின்று அவரை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டார்.
இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ்களை குவித்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. இந்த பதிவில் அவர், ‘குடும்பம் என்பது மிகவும் முக்கியமானது, நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் குடும்பம் என்பது மிகவும் அழகானது, எல்லா சூழ்நிலையிலும் அவர்களுக்கு அருகில் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை நான் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதிலிருந்து உணர்ந்து கொண்டேன். இந்த ஆச்சரியத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன், அவர்களுக்காக நான் தற்போது பிரிட்டனிலிருந்து வந்துள்ளேன். என் அப்பா அம்மா தான் என் உயிர், அவர்கள் என்னை மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்தார்கள். ஆனந்த கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. ஒரு மகிழ்ச்சியான உணர்வை அனுபவித்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களையும் 43,000 அதிகமான லைக்களையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவுக்கு ஏராளமான பாராட்டு தெரிவித்து இருந்தாலும் ஒரு சிலர் இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சகோதரரின் திருமணத்திற்கு கலந்து கொள்வது என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக இந்த 2023 ஆம் ஆண்டில் மாறிவிட்டது என்று தெரிவித்து வருகின்றனர். சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டியது என்பது ஒரு சகோதரியின் கடமை என்றும் அதையே ஒரு ஆச்சரிய நிகழ்வாக பதிவு செய்திருப்பதை பார்க்கும்போது வியப்பாக இருப்பதாகவும் சிலர் கமெண்ட்ஸ் பதிவு செய்துள்ளனர்.
https://www.instagram.com/reel/Cl7zzvlKTnB/?utm_source=ig_embed&ig_rid=cfb1d5aa-54a4-4c3b-b129-2041a8475a09
You may like
திருமணத்திற்கு பெண் கேட்டு நடுரோட்டில் போஸ்டருடன் நின்ற வாலிபர்.. அவ்வளவு விளையாட்டா போச்சா?
28 வயது மருமகளை திருமணம் செய்து கொண்ட 70 வயது மாமனார்.. வைரல் புகைப்படம்!
கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி திருமணம்.. கோடிக்கணக்கில் குவிந்த பரிசுகள்
2022ல் திருமண கொண்டாட்டம்… இந்தியாவில் அதிக திருமணம் நடந்தது இந்த நகரில் தான்!
திருமணத்திற்கு செல்லும் வழியில் டிராபிக்கில் சிக்கிய மணமகள்.. சட்டென எடுத்த புத்திசாலித்தனமான முடிவு!
திருமணமாகாமல் குழந்தைகள் பெற்ற ரொனோல்டா சவுதியில் வாழ முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது?