Connect with us

ஆரோக்கியம்

முருங்கைக்கீரை துவையல் ரெசிபி: மதிய உணவுக்கு சிம்பிள், சத்தான, சுவையான சைடு டிஷ்!

Published

on

மதிய உணவுக்கு சமையல் செய்ய மனம் வரவில்லையா? அதே சமயம் சுலபமாகவும், சத்தானதாகவும் ஒரு சைடு டிஷ் தேடுகிறீர்களா? அப்படியானால் இரண்டு கைப்பிடி முருங்கைக்கீரையும், கொஞ்சம் வேர்க்கடலையும் கொண்டு அருமையான துவையலை செய்து பார்க்கலாம்.

சூடான சாதத்துடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து இந்த முருங்கைக்கீரை துவையலை சாப்பிட்டால், அதன் சுவை இன்னும் கூடுதலாகும். வழக்கமாக முருங்கைக்கீரையை விரும்பாதவர்கள்கூட, இந்த பக்குவத்தில் தயாரித்தால் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவார்கள்.

இந்த சத்தான முருங்கைக்கீரை துவையலை எளிய முறையில் எப்படி செய்வது என்பதை கீழே பார்க்கலாம். ஒருமுறை செய்து பார்த்து, அதன் சுவையை உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து மகிழுங்கள்.


🥬 தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – 2 ஸ்பூன்

  • உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்

  • பச்சை வேர்க்கடலை – 1 கைப்பிடி

  • மல்லி – 1 ஸ்பூன்

  • சீரகம் – ½ ஸ்பூன்

  • வரமிளகாய் – 4

  • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

  • சின்ன வெங்காயம் – 6

  • முருங்கைக்கீரை – 2 கைப்பிடி

  • பூண்டு – 2 பல்

  • உப்பு – சுவைக்கேற்ப

  • தண்ணீர் – தேவையான அளவு

  • பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)


🍲 செய்முறை

  1. முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, பச்சை வேர்க்கடலை, மல்லி, சீரகம் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுக்கவும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.

  2. அதே வாணலியில் வரமிளகாய் மற்றும் புளியை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. பின்னர் அதே எண்ணெயில் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியாக வைக்கவும்.

  4. அதன்பின் முருங்கைக்கீரையை சேர்த்து சுருங்கும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்கவும்.

  5. மிக்சர் ஜாரில் வறுத்த பருப்புகள், வரமிளகாய், புளி, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும்.

  6. அதில் வதக்கிய முருங்கைக்கீரை, தேவையான உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் கொரகொரவென்று அரைக்கவும்.

  7. இறுதியாக அரைத்த துவையலை ஒரு கிண்ணத்தில் எடுத்து, மேலே பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து கலக்கினால், சுவையான முருங்கைக்கீரை துவையல் தயார்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and.