வீடியோ
ஜான்சி ராணியாகவே மாறிய கங்கனா! ’மணிகர்னிகா’ டீஸர்! (வீடியோ)
ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ள ‘மணிகர்னிகா’ படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது. பாலிவுட் இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வரும் ஜனவரி 25ஆம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அமிதாப் பச்சனின் கம்பீர குரலில் படத்தின் டீஸர் தொடங்குகிறது. ராணி லக்ஷ்மிபாயாக கங்கனா வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல தோணுகிறது. அதுவும், ஆங்கிலேயர்களிடையே அவர் நடத்தும் போர்க் காட்சிகள் ஆச்சர்யத்தையும் ஆக்ரோஷத்தையும் அள்ளி தெளிக்கிறது.
ராஜமெளலியின் தந்தை கே.வி. விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.