சினிமா
இந்து என்னடா சந்திரமுகி 2வுக்கு வந்த சோதனை.. இன்னொரு மார்க்கெட் போன நடிகையும் நடிக்கிறாங்களாம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, சோனு சூட் என சந்திரமுகி முதல் பாகம் பல ஆண்டுகளுக்கு முன்பே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியாகி வசூலில் மிரட்டியது.
ஆனால், சந்திரமுகி 2 திரைப்படம் லோ பட்ஜெட் சந்திரமுகியாகவே டோட்டலாக மாறி உள்ளது. ஏற்கனவே பாலிவுட்டில் மார்க்கெட் இழந்த நடிகை கங்கனா ரனாவத் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

#image_title
ஃபிளாஷ்பேக் போர்ஷனுக்கு மட்டும் ஓ மை கோஸ்ட் படத்தில் சன்னி லியோன் வந்தது போல கங்கனா ரனாவத் வந்து செல்வார் என்றும் கூறப்படுகிறது.
மஹிமா நம்பியார், ராதிகா சரத்குமார், வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்து வரும் சந்திரமுகி படத்தில் நடிகை லட்சுமி மேனனும் இணைந்துள்ள தகவல் இன்று சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக வெளியான அறிவிப்பு புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

#image_title
ஒட்டுமொத்தமாக மார்க்கெட் இழந்த நடிகர்களை வைத்து உருவாக்கப்படும் சந்திரமுகி 2 திரைப்படம் ஒரு போதும் சந்திரமுகி முதல் பாகத்துக்கு கிட்ட கூட வராது என ரஜினிகாந்த் ரசிகர்களே கலாய்த்து வருகின்றனர்.
நடிகை லட்சுமி மேனன் பரத நாட்டியத்தில் சிறந்தவர் என்பதால், இந்த படத்தில் அவர் மீது தான் அந்த சந்திரமுகி கங்கனா ரனாவத் பேய் ஏறப்போகிறது என்றும் ராரா பாடல் போல ஒரு கிளாசிக்கல் நடனத்தை படமாக்கி உள்ளார் பி. வாசு என தகவல்கள் வெளியாகி உள்ளன.

#image_title
AK 62 அப்டேட் வரும் என லைகா நோட்டிஃபிகேஷன் ஆன் செய்து வைத்த அஜித் ரசிகர்கள் தொடர்ந்து மற்ற படங்களின் அப்டேட்கள் வருவதை பார்த்து காண்டாகி வருவது தனிக்கதை.



















