Connect with us

சினிமா செய்திகள்

ஹீரோக்கள் அறைகளுக்கு செல்வது இல்லை.. கங்கணா காட்டம்!

Published

on

தமிழில் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்த கங்கணா ரணாவத் தற்போது சந்திரமுகி – 2ல் நடித்து வருகிறார். இந்திய சினிமாவில் எப்போதும் ஒரு பிரச்சினையைத் தோளில் போட்டு திரியும் நடிகை இவராகத்தான் இருக்க முடியும்.

சமூக வலைத்தளத்தில் அரசியல், சினிமா, பெண்கள் உரிமை, ஆணாதிக்கம் பற்றி தயக்கம் இன்றி கருத்துக்களைப் பதிவு செய்வது இவரது வழக்கம் தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி என எல்லா மொழிகளிலும் நட்சத்திர நடிகர்களின் வாரிசுகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்தி திரையுலகில் வாரிசு நடிகர் நடிகைகள் ஆதிக்கம் இருப்பதாக ஏற்கனவே விமர்சனம் செய்திருந்தார்.

தற்போது கதாநாயகர்கள் மீது புகார் தெரிவித்து இருக்கிறார். ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது அவர்கள் கேள்விகளுக்குப் பதில் அளித்து கங்கனா ரணாவத் கூறியதாவது, “நான் யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன். மதிப்பு குறைவான எந்த காரியத்தையும் செய்யக் கூடாது என்று எனது தாயார் கற்றுக்கொடுத்து இருக்கிறார். இது ஆணவமா அல்லது நேர்மையா என்று சொல்லுங்கள்.

நான் மற்ற பெண்கள்போல் கிசுகிசுக்கள் எதிலும் சிக்குவது இல்லை. எனது தாயார் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையோடு வாழ கற்றுக்கொடுத்து இருக்கிறார். அதனால்தான் நான் கிசுகிசுக்களில் சிக்குவது இல்லை.

மற்றவர்களைப்போல் ஹீரோக்கள் அறைகளுக்குச் செல்வது இல்லை. இதனால் இந்தி சினிமா மாபியாக்கள் என்னை தனிமைப்படுத்தி ஒதுக்குகிறார்கள்” என்றார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?