சினிமா செய்திகள்
இன்னும் 12 மணி நேரம் தான் உயிருடன் இருப்பேன்: நயன்தாரா

கொஞ்சம் அமைதியாக, சண்டை போடாமல், பதட்டப்படாமல் இருந்தால் 12 மணி நேரம் உயிருடன் இருக்கலாம் என நயன்தாரா வசனம் பேசிய ’O2’ என்ற படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகியுள்ளது .
நயன்தாரா நடிப்பில் வெளியான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த திரைப்படம் O2.
ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் மற்றும் த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த டீசரில் நாம் அமைதியாக, பதட்டப்படாமல், சண்டை போடாமல் இருந்தால் இன்னும் 12 மணி நேரம் உயிருடன் வாழலாம் என்று நயன்தாரா தனது குழந்தையிடம் சொல்லும் வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படம் தமிழழகன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.