சினிமா
மாவீரன் செகண்ட் சிங்கிள் அப்டேட்.. நாளைக்கு செம மாஸா வருது!

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் நாளை வெளியாகப் போவதாக தயாரிப்பு நிறுவனம் எடிட்டிங் டேபிள் ரா கட் வீடியோ க்ளிப்ஸையே தற்போது வெளியிட்டு ஹாட் அப்டேட் கொடுத்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் படங்கள் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து அவருக்கு மிகப்பெரிய அந்தஸ்த்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது.

#image_title
ஆனால், கடைசியாக தெலுங்கு இயக்குநர் அனுதீப் கே.வியை சிவகார்த்திகேயன் நம்பிய நிலையில், பிரின்ஸ் படத்தைக் கொடுத்து சற்றே சிவகார்த்திகேயனின் சந்தோஷத்தை கெடுத்தார். ஆனால், இந்த முறை மிஸ்ஸே ஆகாது என மடோன் அஸ்வின் இயக்கத்தில் தரமான ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
யோகி பாபுவை வைத்து மண்டேலா எனும் தரமான படத்தை இயக்கி தேசிய விருது வென்ற மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படம் இந்த சம்மருக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

#image_title
ஆனால், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அதிகம் உள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. ஏற்கனவே முதல் பாடலான சீனா சீனா பாடல் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்த நிலையில், வீரமே ஜெயம் என செகண்ட் சிங்கிள் வெளியாக உள்ளது என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.